பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. எட்டியும் ஒட்டியும் ஒலிம்பிக் போட்டிப் பந்தயங்களில் பெண்கள் பங்கு பெறலாம் என்ற உரிமை கிடைத்தவுடன், வாங்கிக் கொண்டு தூங்கிப் போய் விடவில்லை பெண்ணினம். வானளாவப் பறக்க ஆரம்பித்து விட் டார்கள். வேகம் பேச்சில் மட்டுமில்லை. செயலிலும் தான். பெண்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது. அவர்கள் உடல மைப்பின்படி, கலந்து கொள்ளவும் கூடாது என்று திட்டமிட்டுத் தடுத்தவர்கள் திடுக்கிட்டுப்பின் வாங்கும் வண்ணம் பெண்கள் பந்தய நிகழ்ச்சி களில் போட்டியிட்டனர். 1891ம் ஆண்டு கூடைப்பந்தாட்டம் என்ற ஆட்டத்தைக் கண்டுபிடித்தார் டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்ற அமெரிக்கர். ஆண்கள் கூட்டம் அந்த ஆட்டத்துடன் ஐக்கியமானது போல,