பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 ஆனந்த வெறியில் ஆடித் திளைத்தது. இதனைக் கண்ட பெண்களுக்குப் பொறுக்கவில்லை. நாங்க ளும் இந்தக் கூடைப் பந்தாட்டத்தை ஆடுவோம் என்று போட்டி போட்டுக் கொண்டு ஆட முயன்றனர். ஆனல், கூடைப்பந்தாட்ட வேகமும். ஆடும் முறைகளும் பெண்களுக்கு ஒத்துவரவில்லை. எங்க ளால் இந்த ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடமுடிய வில்லை. ஆட்ட விதிகளும் மிகக் கடுமையானதாக இருக்கின்றன. ஆதலால், ஆட்டத்தின் கடுமை களைக் களைந்தெறிந்துவிட்டு, மென்மைபடுத்தித் தாருங்கள்’ என்று முறையிட்டுக் கொண்டதன் பேரில், ஒரு புதிய பந்தாட்டம் தோன்றியது. அதற்குப் பெயர் வலைப்பந்தாட்டம். (Net Ball). மெதுவாக இதமாக, பதமாகப் பெண்கள் ஆட வேண்டும் என்ற இலட்சியத்துடன் தொடங்கப் பட்ட வலைப்பந்தாட்டம் இன்று பெண்களால் கைவிடப்பட்டது. நாங்களும் ஆண்களுக்கு இணை யாக கூடைப்பந்தாட்டம் ஆடுவோம். அந்த வேகத் திற்கும் விதி கடுமைகளுக்கும் எங்களாலும் ஈடு கொடுக்க முடியும் என்று சூளுரைத்தல்லவா ஆடு கின்றனர். ஆரணங்குகள் அழகுப் பெண்மணிகள் என்று வருணிக்கப்பட்ட பெண்ணினம், இன்று பங்கு பெறாத விளையாட்டுக்களே இல்லை.