பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



58

கால் பந்தாட்டம் ஆடுகின்றனர். கோல் ஏந்திக் கொண்டு ஹாக்கி ஆடுகின்றனர். நாள் முழுதும் நின்று விளையாடும் கிரிக்கெட் ஆடுகின்றனர். குத்துச்சண்டை போடுகின்றனர்..மல்யுத்தம் புரிகின்றனர்.குதிரை ஏறி சாகசம் செய்கின்றனர். குலைநடுங்க வைக்கும் சாகசச் செயல்களிலும் கலந்து கொள்கின்றனர். அவர்கள் எதை விட்டார்கள்? ஒன்றுமில்லை என்ற பதில்தான் நமக்குக் கிடைக்கிறது.

ஒலிம்பிக் பந்தயங்களில் மிகப்பின் தங்கித் தானே பெண்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் 21 முக்கிய விளையாட்டுக்கள் உள்ள 12 முக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றனர். அதாவது 49 போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போட்டியிட்டனர்,

அவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டார்கள் என்றால் பெருமையில்லை என்று எண்ணினார்களோ என்னவோ, ஆண்கள் போட்டியிலும் கலந்து கொண்டனர். குதிரையேற்றப் போட்டிகள், (பிஸ்டல்) கைத்துப்பாக்கிச் சுடுதல், மற்றும் நீண்ட குழல் துப்பாக்கிச் சுடுதல் இவற்றிலும் போட்டியிட்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்லல் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டனர்.