பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 இப்படி ஒரு ஏற்றமிகு நிலைமை எப்படி ஏற்படுகிறது? சமுதாயத்தின் ஒரு பாதி பெண்கள் என்கிறோம். மனித இனத்தின் மணி மகுடம் என்கிறோம். ஆனால், அவர்கள் விளையாட்டில் மட்டும் ஏன் பங்கு பெறக் கூடாது என்று தடுக்கிறோம்? த டைபோடுகிறோம்? புரியாத பலர், புரிந்த தைப் போலப் பேசுகிற போதுதான், குழப்பங்களே கொப் புளித்துத் கொண்டு வருகின்றன. குழப்பவாதிகள் எல்லோரும் சுயநலவாதிகள் தானே! அந்த அக்ரமக்காரர்களின் அடா வடித்தனத்திற்கு ஆட்பட்ட காலமே, பெண்கள் விளை யாட்டுக்களில் பங்கு பெற முடியாத காலமாகப் போய் விட்டிருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. உலக சாதனைகளைத் திருத்தி எழுதவும், மாற்றி அமைக்கவும் கூடிய வல்லமை மிக்கவர்களாக வீராங்கனை கள் விளங்குகின்றார்கள். விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு எதுவும் ஆகி விடுவதில்லையே? ஏன்? எப்படி? எதனால்? இத்தகைய கேள்விகளுக்குரிய பதிலாகத் தான் இந்தப் புத்தகம் எழுதப் பெற்றிருக்கிற க. உங்கள் வேகத்தைத் தடை செய்ய நானும் விரும்ப வில்லை.