பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. பெண்களும் மாரதான் ஓட்டமும்

மாரதான் ஓட்டம் என்றால், 26 மைல் 385 கெஜ தூரம் ஒருவர் ஒடியாக வேண்டும். அதை தற்போதைய அளவில் சொன்னால் 42 கிலோ மீட்டர் 195 மீட்டர்கள் ஆகும். இவ்வளவு நீண்ட தூரத்தைப் பெண்களால் ஒட முடியுமா? ஓடினால் பெண்கள் உடல் என்னாகும்? வாடி வதங்கியல்லவா போகும்? மென்மை மிகுந்த உடல் வேரறுந்த கொடியாக அல்லவா வீணாகிப் போகும் என்றெல்லாம் விளங்காமற் பேசியவர்கள் எல்லாம், வியந்து போகின்ற அளவுக்கு மாரதான் ஓட்டத்தைப் பெண் கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள். ஆண்களால் மட்டுமே ஓடமுடியும் இந்தத் தூரத்தை என்று எண்ணித்தான் 1896ம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் நடந்த புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் முதன் முறையாகச் சேர்த் தனர், அப்பொழுது ஸ்பிரிடன் லூயிஸ் என்னும்