பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

“நெடுந்துாரம் ஒடுகின்ற போட்டிகளில், ஆண்கள் உடலில் ஏற்படுகின்ற மாறுதல்களைப் போலவே பெண்களுக்கும் ஏற்படுகின்றன. ஆனால், அந்தத் தேவையான நெஞ்சுரமும், உள்ளாற்றல் போன்றவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்கள் உடலமைப்பு இருக்கிறது. தேவையான என்சைம் மற்றும் லியுகோ சைட்ஸ் போன்ற நுண்ணனுக்களை பெண்கள் உடலில் உள்ள இரத்தம் அதிகப்படுத்தி, நிலைமையை சமாளிக்கும் ஆற்றலை அளித்துவிடுகிறது” என்று கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் அமைப்பில், வடிவத்தில் ஆண்களை விட பெண்கள் சற்றுக் குறைந்தவர் போலத் தோன்றினாலும், மனோதத்துவப்படி அவர்கள் அந்தக் குறையை ஈடுகட்டிச் சமாளித்துக் கொள்கின்றனர். விளையாட்டு வீரர்களைவிட, விளையாட்டு வீராங்கனைகளுக்குத் தொடர்ந்து இடைவிடாது செயலாற்றும் திறன் அதிகமாக இருக்கிறது. அந்தத் திறமையும், அவர்கள் உண்மையாகவே உள்ளத்தில் கொண்டிருக்கும் இலட்சியப் பிடிப்பும், அதற்காக அவர்கள் பொறுமையாக உழைத்து வரும் உழைப்பும், அவர்களை மேன்மையானவர்களாக ஆக்கிவிடுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

இந்த அடிப்படை ஆராய்ச்சி உண்மையை அறிந்து கொண்டவர்களுக்குப் பெண்களின்