பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 இன்றைய நிலை பெரிய வாய்ப்பினை அளித்து விடாது. ஆமாம்! பெண்கள் ஆண்கள் ஆடக் கூடிய அத்தனைவிளையாட்டுக்களையும் முற்றுகை யிட்டுப் பிடித்துக் கொண்டதுபோல, ஆக்ரமித்துக் கொண்டு விட்டனர். இன்று அவர்கள் ஆடாத ஆட்டமில்லை, வரவழைக்காத கூட்டமில்லை என்றே தைரியமாகக் குறிப்பிட்டு விடலாம். மலையேறுதல், துடுப்புப் படகில் ஏறிக் கொண்டு கடல் பயண்மாக உலகம் சுற்றுதல், பாராசூட்டிலிருந்து குதித்தல், துப்பாக்கிச் சுடுதல், குதிரையேற்றப் போட்டிகள், மற்றும் விசை மோட்டார் ஒட்டுதல், ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடத்தல், போன்றவற்றில் பங்குபெற்று சாதனை புரிந்து வருகின்றனர். ஒரு சில உலக சாதனைப் புரிந்த பெண் மணி களையும், அவர்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சி களையும் பாருங்கள். நிலைமைகள் புரியும். ஜப்பானிய வீராங்கனையான யூங்கோ டேபல் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தாள். நார்வே நாட்டின் அனிடா ஓல்டு ஸ்பிரிங்போர்டில் துள்ளி 98 மீட்டர் தாரம் தாண்டிக்குதித்து சாதனை செய்தாள். ஒரு மணிக்கு 984-936 கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் வேகக்காரை ஒட்டியஅமெரிக்க வீராங்கனையான கிட்டி ஒ நெயில் என்பவள் புதிய சாதனை புரிந்தாள், 19 வயதினளான சிந்தியது