பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


நிக்கோலஸ் தடித்த எழுத்துக்கள் எனும் கனடா நாட்டுப் பெண் , ஆங்கிலக் கால்வாயை இரண்டு முறை 19 மணி 5 நிமிடங்களில் நீந்திக் காட்டினாள்.

வானத்திலே மணிக்கு 2600 கிலோ மீட்டர் விமானத்தில் பறந்து உலக சாதனை செய்தாள். ஸ்வெட்லானா சாவிஸ்கயா எனும் ரஷ்ய மங்கை.

கடுமையான விளையாட்டாகக் கருதப்படுவது பனியில் ஆடும் ஹாக்கி என்பதாகும். அது பயங்கரமான ஆட்டமாகும் அதனை ஆடுபவர்கள் மேனி முழுவதும் பாதுகாப்பாக மெத்தைகளைக் கட்டி ஆடவேண்டும். அத்துடன் வலிமை நிறைய வேண்டும். அந்த ஆட்டத்தையும், இப்பொழுது பெண்கள் ஆட ஆரம்பித்து விட்டார்கள்.

பெண்களுக்கு விளையாட்டுக்களில் உள்ள ஆர்வத்தைக் கண்ணுற்ற ஒலிம்பிக் பந்தயக் கழகத்தின் நிர்வாகிகள், வரப்போகும் 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்க இருக்கும் போட்டிகளில், இன்னும் அதிகமான நிகழ்ச்சிகளை சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.

அதாவது 16 விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்குள்ளாகவே போட்டிகள் நடைபெறும். அத்துடன், துப்பாக்கிச் சுடுதல், குதிரையேற்றப் போட்டிகள், விண்ட் சர்பிங் என்னும் மூன்று விளையாட்டுக்களிலும் ஆண்களுடன் இணைந்து போட்டி போடலாம் என்பதே! அத்துடன், சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் உண்டு.