பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 பெண்கள் என்று பெரிது படுத்திப் பேசும் அளவுக்கு அவர்களது ஆற்றல் பெருகிக்கொண்டே போகிறது ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்கள் அல்லர் என்று வழக்காடிக் கொண்டிருந்த பெண் ணினத்தின் பிரதிநிதிகள் சிலர், ஆண்களை விடவும் வலிமை மிக்கவர்கள் பெண்கள் என்று சரித் திரம் படைக்கின்ற சாதனைகளைப் புரிந்திருக் கின்றனர். ராணி மங்கம்மாள், ஜான்சிராணிலட்சுமி பாய் போன்ற வீராங்கனைகளைப்பற்றி அறிந்தது போலவே, மேலை நாட்டுப் பெண்கள் ஆண் களுடன் போட்டியிட்டு, ஆரவாரமான வெற்றி களைப் பெற்று ஆனந்த நர்த்தனம் புரிந்திருக் கின்றார்கள். இதோ சில உதாரணங்கள். ஜெர்மன் நாட்டிலே பெரிய கதைநாயகியாகப் புகழ் பெற்றிருப்பவள் புருன்கில்டா என்பவள். இவள் ஆண்களுடன் போட்டியிட்டு, அவர்களைத் தோற் கடித்தவள். என்னென்ன போட்டிகள் என்றால், வேலெறிதல், உயரத் தாண்டும் போட்டி போன்ற வற்றில் எத்தனை ச்ாமர்த்தியம்! செக்கோசுலோவோகியா நாட்டு மன்னன் நான்காம் சார்லஸ் என்பவரின் மனைவி, ராணி அல்ஸ்பேட்டா. மகத்தான சாதனை புரிந்த வீரப் பெண்ணாகத் திகழ்ந்திருக்கிறாள். அதாவது தங்கச் சரிகைகள் மின்னும் ஆடைகள் அணிந்த