பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பித்தாள். அவள் பெயர் செல்வி எலிசபெத் அவளது எடை எவ்வளவு தெரியுமா? 121.3 கிலோ ஆகும்.

இதோ ஒரு கலிகால பீமி (பீமனுக்குப் பெண் பால்) ஒரு அமெரிக்க வீராங்கனை பெயர் ஜோசபின் பிளட் அவன் ஒரு அகன்ற பலகையை தலைக்கு மேலே பிடித்துக் கொண்டாள். அந்தப் பலகை மேலே 23 ஆண்கள் ஏறிக் கொண்டார்கள். அவர்களைத் தாங்கியவாறு தரக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள் அந்தத் துடியிடையாள். அந்த 23 ஆண்களின் எடை எவ்வளவு தெரியுமா? 1616 கிலோ ஆகும். அவளுக்கு 'டைமண்ட்பெல்ட்' விருதளித்து அந்த அரசாங்கம் கவுரவித்திருக்கிறது. எவ்வளவு பெரிய சாதனை இது? எத்தனை ஆண்களால் இது முடியும்?

இதோ இன்னொரு பலசாலியான பெண் 90 கிலோ உள்ள தனது கணவனை ஒருபக்கம் இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டு, தனது எதிரே உள்ள பல இரும்புக் குண்டுகளை ஒரு குண்டால் அடித்து விளையாடி, அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். அது மட்டுமல்ல. 131 கிலோ எடையைத் தூக்கி, ஒர் உலக சாதனையையே ஏற்படுத்தியிருக்கிறாள். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் பிலிப் புரும்பாச் என்பவரின் மகள்தான். இந்த வீராங்கனை பெயர் கட்டி புரும்பாச்.