பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இதைவிட வியப்பு தரும் இன்னொரு சான்று எடை தூக்கும் சக்தி ஆண்களுக்குத்தான் என்பதை பொய்யாக்கி, உலக சாதனைகளைக் குறிக்கும்புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் ஒரு சாதனை வெளிவந்திருக்கிறது. பாரிஸ் நகரத்திலே 1956ம் ஆண்டு அக்டோபர் மாதம் நான்காம் தேதி ஏற்படுத்தப்பட்ட உலகசாதனை இது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜேன்வெஸ்லி என்பவள் 178 கிலோ எடையைத் தூக்கியிருக்கிறாள்.

எடை தூக்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் எத்தனை ஆண்களால் இந்த எடையைத் தூக்க முடியும்? பெண்ணொருத்தித் துாக்கியிருக்கிறாளே!

எடைத் துக்கும் போட்டி மட்டுமா? மல்யுத்தம்,குத்துச் சண்டை போன்ற போட்டிகளில் எல்லாம் பெண்கள் தலையிட்டுக் கொண்டு, ஆலவட்டம் போட்டு வருகின்றார்கள். வெளிநாடுகளில் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டி போடுகின்றார்கள் என்றால், அங்கே டிக்கெட்டுகள் எல்லாமே விற்றுப் போகின்றன. காணக் கண்கொள்ளாக் காட்சிகளாக அல்லவா திகழ்கின்றன!

பிரான்சு நாட்டில் ஒரு காட்சியைக் கண்டதாக கிரில் பிரிவாலோவ் என்பவர் எழுதுகிறார் இப்படி. டீ.வியில் அந்தக் காட்சியை அவர் காண்கிறார். இரண்டு பெண்கள் குத்துச் சண்டை போடுகிறார்