பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. அந்த நாள் முதல்


உலகில் நடைபெறுகின்ற விளையாட்டுக்கள் அத்தனையிலும் போட்டியிடுவதற்குப் பெண்கள் முயன்று விட்டனர் என்றால் அது பெய்யாகிவிடும் முனைந்து விட்டனர், இரண்டறக் கலந்து விட்டனர் என்பதே பொருத்தமானதாகும்.

விளையாட்டுக்களிலே முரட்டுத்தனமானது, மூர்க்கத்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது என்று பலராலும் பலப்பட பேசப்படுகின்ற எடைத் தூக்கல், குத்துச் சண்டை போடுதல், மல்யுத்தம் புரிதல் என்னும் மூன்றையும் குறிப்பிடுவார்கள். அவைகளுக்குள்ளும் ஆரணங்குகள் கலந்து கொண்டு, ஆயிரக் கணக்கான பார்வையாளர்களிடையே ஆர்ப்பாட்டமான போட்டிகளைப் போட்டு, ஆணினத்தையே அயரடித்துக் கொண்டிருக்கின்றனர்!

ஐயோ! இதென்ன விபரீதம்? வேண்டாத அகோரம் கலைப்பண்புள்ள மனித இனத்தில் காணக் கூடாத அலங்கோலம் என்று ஒப்பாரி வைப்