பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75 விழாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி ஒரு நண்பர் என்னிடம் கூறினார். விழாவில் கலந்து கொண்டு பேசிய வீரனிடம் கேட்கப்பட்ட கேள்வி பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாமா என்று. பெண்கள் விளையாட்டுக்களில் கலந்து கொள்வது பற்றி எனக்கு மாறுபட்டக் கருத்து எதுவும் இல்லை. விளையாட்டு என்பது மன மகிழ்ச்சிக்காகவும், உடல் வளர்ச்சிக்காகவும் உண்டானது தான். ஆனால், போட்டிகள் என்று வரும் பொழுது, மனமகிழ்ச்சி மாறுபட்டுப் போகிறது அதன் தொடர்பாக, ஆக்ரோஷமான உணர்வு களையும் அதிகப்படியான பயிற்சி முறைகளையும் பெண்கள் உண்டாக்கிக் கொள்ள வேண்டியிருக் கிறது. அந்த முறையானது பெண்களின் அழகை யும், மென்மையையும், நளினத்தையும் மாற்றக் கூடிய அளவுக்கு வன்மை மிக்கதாகப் போய் விடு கிறது. இந்தியப் பெண்கள் எழிலுக்கும், மென்மைக் கும் நளினமான தோற்றத்திற்கும் பேர் போனவர் கள். அப்படியே அவர்கள் இருக்கட்டுமே! எங்கள் நாட்டுப் பெண்களைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே என்று நகைச்சுவையுடன் கூறி பதிலளித் ததாக என் நண்பர் கூறிய கருத்தினை இங்கு எழுதுவதற்குக் காரணம், பெண்கள் போட்டிக் காகத் தங்களை ஆயத்தம் செய்வது பொருந்தாத வேலையென்று உலக மகா வீரர்கள் கூறி வரும் கருத்தை வலியுறுத்துவதற்காகவே.