பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 மாறுபட்டக் கருத்து ஒன்று எழும்போது தான், அதைச் செய்தே தீர வேண்டும் என்று வேகமும் வெறியும் உண்டாகும். அது இயற்கை தான். அந்த இயற்கை தான், அந்த இயற்கையான போக்கிற்கு எழிலார்ந்த மங்கையர் கூட்டமும் விதி விலக்கல்லவே! ஆதி வரலாற்றினைப் படிக்கும் பொழுது ஒரு கருத்தைப் பார்க்கலாம் ஆதாம் ஏவாள் கதை தான் அது. தின்னக் கூடாது என்று ஒரு கனியை ஒதுக்கி வைத்தபோது, தின்ன வேண்டும் என்று ஏவாள் ஆசைப்பட்டு அக் கனியை உண்டதாகவும், அதனால் ஏற்பட்ட பலன் மிகப் பெரியது என்றும் நாம் அறிவோம். வேண்டாம் என்பதை விரும்புவதும், அதற்காக எத்தனைத் துயரங்கள் வந்தால் எதிர் கொள்வதும், ஏற்று நலிவதும். எதிர்நீச்சல் போட்டுப் போராடு வதும் மனித இயல்பு தான். சமுதாயத்தில் சரிபாதி அங்கமாகத் திகழும் பெண்கள், விளையாட்டுத் துறையிலும் இந்த உணர்வுடனேதான் செயல்படு கின்றார்கள். * பழங்கால கிரேக்க வரலாற்றைப் படிக்கும் பொழுது ஆண்கள் கலந்து கொள்கின்ற விளையாட் டுப் பந்தயங்களைப் பெண்கள் பார்க்கக் சிடடTது என்றும், மீறி பார்க்க வந்தால், மரணதண்டனை என்றும் கடுமையான சட்டம் இயற்றிக் கண்