பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. என்ன ஆகும்? பெண்கள் விளையாடினால் என்ன ஆகும் என்ற கேள்வி இன்று நேற்று எழுந்ததல்ல. மனித சமுதாயம் விளையாட்டுக்களில் மனம் விரும்பி ஈடுபட்ட தினத்திலிருந்தே தொடங்கி விட்டது. மக்களினத்தின் சரிபாதி மங்கையினம் அல்லவா! அதனால் ஆதிகாலந்தொட்டே இந்த அரியபிரச்சினை ஆரம்பமாகி விட்டது. பெண்களை வீட்டோடு வைத்துப் பூட்டிக் காத்த நாடுகள் இருந்தன. பெண்கள் முகத்தை வெளியே காட்டவே கூடாது என்று திரையிட்டுப் போர்த்திய நாடுகளும் இருந்தன. வெளியே உலவினாலும், விளையாட்டுக்கள் பக்கம் வரக் கூடாது என்று விரட்டிய நாடுகளும் இருந்தன. என்றாலும், பெண்கள் இல்லாமல் விளை யாட்டுக்கள் இல்லை என்றுதான் வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. இன்று உலகமெங்கும் புகழ்பெற்ற ஆட்டமாக விளங்குவது டென்னிஸ் ஆட்டம். இந்த ஆட்டத்