பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தில் உலகப் புகழ் பெற்ற சிறந்த வீரர்கள் நிறைந்த, இடமாகத் திகழ்வது அமெரிக்க நாடுதான். இந்த டென்னிஸ் ஆட்டம், அமெரிக்காவில் காலூன்றக் காரணமாக இருந்தவள் செல்வி மேரி அவுட்டர் பிரிட்ஜ் என்பவள். (இந்த வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்கள், விளையாட்டுக்களில் விநோதங்கள் என்ற எனது புத்தகத்தில், 55வது பக்கக் கட்டுரையைப் படிக்கவும்.)

அவுட்டர் பிரிட்ஜ் பட்ட அவதிக்குப் பரிசு, இன்று அகில உலகத்தில் அமெரிக்கா தலை சிறந்த நாடாகத் திகழ்கிறது.

கூடைப் பந்தாட்டம் என்ற ஆட்டத்தை, டாக்டர் ஜேம்ஸ் நெய்சுமித் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்த உடனே, பெண்களுக்கும் இது போல ஒர் ஆட்டம் வேண்டும் என்று அமெரிக்கப் பெண்மணிகள் போராடினார்கள். கூடைப் பந்தாட்டம் எங்களால் ஆட முடியாது என்று, வலைப் பந்தாட்டம் (Net Ball) என்று ஒர் ஆட்டத் தைக் கண்டு பிடித்தவளும் ஒரு பெண்தான்.

பெண்கள் பந்தாட்டங்களில் சிறப்பான இடம் பெறவேண்டும் என்று விரும்பினால், அதற்காக உதவும் ஆயத்த ஆட்டம் எறி பந்தாட்டம் (Throw Ball) தான். அந்த ஆட்டத்தைக் கண்டு பிடித்து உருவாக்கியவர் திருமதி பக் என்பவர்தான்.