பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

ஆகவே, ஓர் ஆணின் வெற்றியின் பின்னே ஒரு பெண்ணின் தியாகம் மறைந்து கிடக்கிறது என்பார்களே, அதைப் போல, ஒவ்வொரு விளையாட்டின் வளர்ச்சியின் பின்னாலே, பெண்களின் தியாகமும் பெரும் உழைப்பும் நிறைந்து அதே நேரத்தில் மறைந்து கிடக்கிறது.

பெண்கள் விளையாட்டுக்களில் பேருணர்வோடுதான் பங்கு பெற்று வருகிறார்கள் என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் மிக அருமையாக நிரூபித்துக்காட்டி வருகின்றன. ஒரு ஐம்பது ஆண்டு புள்ளி விவரக் கணக்கைப் பாருங்கள்.

1934ம் ஆண்டு 100மீட்டர் ஓட்டத்தில் பெண்கள் ஓடிய சாதனை நேரம் 11.7 நொடிகள். ஆண் ஓடியநேரம் 10.3 நொடிகள். அதாவது 13.6 சதவிகிதம் ஆண்கள் விரைவாக ஓடியிருக்கிறார்கள்.

அதே தரரத்தை 1954ல் ஓடிய ஆண்கள் பெண்கள் நேரத்தைக் கணக்கிட்ட போது, அதிக வித்தியாசமாக இருந்த சதவிகிதம் 11.4 ஆக குறைந்தது.

1974ல் இந்த சதவிகிதம் 9.1 ஆகக் குறைந்து போனது. இப்பொழுது இன்னும் குறுகிக் கொண்டே வந்து ஆண்கள் வேகத் தோடு பெண்கள் வேகமும் இணையானதுதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் முன்னேறிக் கொண்டே போகிறது