பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


S5 இதுவே பெண்களின் பேரெழுச்சி மிகுந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதனால்தான் பெண்கள் விளையாட்டும், பெண் கள் பங்கு பெறும் தனித்திறன் போட்டிகள் எல்லாமே, பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந் திழுக்கின்ற கவர்ச்சிக் காட்சிகளாக அமைந்துவிடு கின்றன. மாதவிலக்கு ஒரு தடை பெண்களுக்குள்ள பலவீனமான ஒன்று மாத விலக்கு அதனால் தான் விளையாட்டு அவர் களுக்கு வேண்டியதில்லை என்று வெறித்தனமாக எதிர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். இந்த மாதவிலக்கு நேரத்தில், மாதர்களின் போட்டித் திறமை, இயல்பாக இருக்கின்ற ஆற்றல் துணுக்கம் குறைகின்றது என்பது உண்மை தான். அதாவது 80% திறமை குறைகிறது என்பதாகவும் கணக்கிட்டிருக்கின்றார்கள். அதற்குரிய காரணம் என்னவென்றால், அவர்களுக்கு அப்பொழுது ஏற்படுகின்ற அடி வயிற்று வலி தான். மாதவிலக்குத் தொடங்குகின்ற நேரத்தில் எழுகின்ற வலி, உண்டாகின்ற மனக் குழப்பம், கிலேசம் எல்லாம் ஆரம்பத்தில் ஒரு விதமான உலைச்சலை ஏற்படுத்தி விடுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்த அதிர்ச்சியும்