பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89 பெறும் உடலைக் காக்கும் உண்மையான வாழ்வை யும் உயர்ந்த இன்பத்தையும் பெறமுடியும் என்பது இயற்கையின் எழுதாத சட்டமாகும். is பெண்களுக்கும் அந்த நீதியும் நியதியும் தேவைதான். அவர்களும் நோயற்ற வாழ்க்கை வாழவேண்டாமா? பெண்களும் வாழ்க்கையில் பல துறைகளில் புகுந்து எதிர் நீச்சல் போட்டுத்தான் வாழ்கின்ற பயங்கர காலமாக இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு நூதனமான சூழ்நிலை குடும்பச் சூழ்நிலை மற்றும் பல பிரச்சனைகளுக்கு ஈடு கொடுக்க அவர்கள் போராடி வாழ வேண்டிய பொல்லாத நிலையும் உண்டு. * - விளையாட்டில் பெண்கள் ஈடுபடுவதால், மனக்கட்டுப்பாடு பெறும் மார்க்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது தனது நிலைமையையும் தகுதியையும் திறமையையும் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறமுடிகிறது. கட்டுப்பாட்டோடு வாழும் கடமை உணர்வினையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. வெற்றியில் பெருமிதம் கொள்ளவும். தோல் வியைத் தாங்கிக் கொள்ளும் குணத்தையும் கொள்ளுகின்ற பதமான நெஞ்சினை பெறமுடிகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். இவ்வாறு தான் பெண். 6 - . . .