பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 வாழ்ந்து கொள்ளவேண்டும் என்று வரையறைக் குட்பட்ட வாழ்க்கை நெறியை விளையாட்டுக் கற்றுக் கொடுத்து விடுகின்றது. இவ்வளவு இனிய பரிசுகளை ஏந்திமையர்க்குத் தருகின்ற விளையாட்டுக்களை ஏற்றதில்லை, நாங்கள் ஏற்பதில்லை’ என்று எதிர்வாதம் செய் கின்ற இயலாத ஆட்களையெல்லாம் பெண்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டு, உதறி ஓரத்தில் நிற்க வைத்து விட்டு, விளையாட்டுக்களில் வந்து கலந்து கொள்ள வேண்டும். ஆனால் ஒன்று, பெண்கள் அனைவரும் பெண்களுக்குரிய விளையாட்டை, பெண்களுடனே தான் ஆட வேண்டும். பெண்களுடனே தான் போட்டியிட வேண்டும். o ஆண்களுக்கு நிகராக வர வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால் ஆண்களாக ஆகி விடவேண்டும் என்ற ஆவேசம் வரக்கூடாது. ஆண்கள் செய்கின்ற பயிற்சிகளையெல்லாம் செய்தே தீருவோம் என்றால் அது ஆரணங்களுக்கு ஏற்காது. முகம் விகாரமாகும். தசைகள் முறுக்கேறும் தண்மையான நளினம் தடைபட்டுப் போகும். பெண்கள் எப்பொழுதும் பெண்கள் தான் என்கின்ற பெரிய உண்மையை மறக்காத வரை,