பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9 | பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் ஒன்றும் ஆகாது. விரைவு வேண்டும். உயர வேண்டும். வலிமை யாக இருக்க வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவம் தான் விளையாட்டின் தத்துவமாகவும் விளங்குகிறது. இந்தத் தத்துவத்தை நடை முறைப் படுத்த சீரான போக்கும், நேரான நெறிகளும் தேவை. பெண்கள் உடல் உறுப்புக்களை, மனோ பாவத்தை, இயற்கையான இதத்தை மாற்றுகின்ற எந்தத் காரியத்திலும் ஈடுபடாமல் பெண்கள் விளையாட வேண்டும். பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்? ஒன்றும் புதிதாக ஆகிவிடப் போவதில்லை. ஒரு பெண் அல்லது ஒரு தாய் வலிமையோடு இருந்தால் அந்தக் குடும்பம் வலிமையான குடும்ப மாகவே விளங்கும். வலிமையான குடும்பமே சமுதாயம் அமைய உதவும். வலிமையான சமுதாய மே வலிமையான நாட்டை வடிவமைத்துக் கொடுக்கும். ஆகவே, ஒரு பெண்ணை வலிமை யாக்கி, அதன் மூலம் நாட்டை வலிமையாக்கிட உதவும் விளையாட்டில் பெண்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய எதிர்பார்ப்பு. இனிய வருங்காலத்தின் இதமான பூரிப்பாகும்.