பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பார்த்தால் பெண்ணைவிட ஆணின் ஆயுள் தான் கூடுதலாக இருக்கவேண்டும். கர்ப்பவாசம் முதல் “பூப்பு” எய்துவது வரை ஆணைவிட வேகமாகப் பெண் முன்னேறுகிறாள். பிறகு அவளுடைய வளர்ச்சி நின்றுவிடுகிறது.ஆணின் வளர்ச்சியோ நிற்பதில்லை. 45-55 வயது வரை தான் ஒரு பெண் இன விருத்தி செய்ய முடியும். ஆணுக்கு 60-70 வயது வரை இந்தச் சக்தி உண்டு. எனவே, சீக்கிரமாக முதிரும் சீக்கிரமாக உதிரவும் வேண்டும்.ஆனால் ஆணின் இயல்பான ஒரு பலவீனம் இங்கே குறுக்கிடுகிறது.

அதாவது நீரோட்டத்தோடு போகாமல் எதிர் நீச்சல் போடுவது ஆணின் சுபாவம். இதன் மூலம் அவன் தனக்கு ஆபத்தைத் தேடிக்கொள்கிறான்.

அதனால் தான் பெண்களுக்கு விளையாட்டால் பயன்கள் தான் அதிகமே தவிர பாதிப்பு இல்லை என்னும் முடிவுக்கு நாம் வருகிறோம்.

பெண்கள் விளையாடினால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பேரானந்தம். சமுதாயத்துக்கோ பெரும் லாபம்.