பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. சீட்டாட்டத்தின் கதை சீட்டாட்டம் என்றால் சூதாட்டம் என்று சொல்வார்கள் பலர். ஆனால் அது சிந்தனை உள்ள வர்கள் மட்டுமே ஆடக்கூடிய அறிவார்ந்த ஆட்டம் என்று அதை ஆடுபவர்கள் பெருமையாகப் பேசிக் கொள்வதை நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டு வருகிறோம் இரவு பகல் பாராது, இந்த உலக சூழ் நிலையையே மறந்து, கையில் வைத்திருக்கும் பீட்டுக்களுடன், கண்களையும் கருத்துகளையும் மேயவிட்டுக் கொண்டு ‘ஹாயாக இருக்கும் ஆட்டக்காரர்களைப் பார்க்கும் பொழுது, இது சூதாட்டம்தான், சிந்தனையைக் கவர்ந்து செயலற்ற வராக்கி விடும் பேயாட்டம் தான் என்று நம்மை நினைக்கத்துாண்டுவதும் உண்மைதான். ஆனால், சீட்டாட்டம் பிறந்த கதையை நாம் பார்க்கும் பொழுது, நாம் கொண்டிருக்கின்ற கருத்து தவறு என்பது உண்மையாகிறது. இப்பொழுது நாற்றம் என்று பயன்படும் வார்த்தைக்கு முற்