பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

காலத்தில் மணம் என்று பொருள் இருந்ததாம். மனத்தின் மானம் போய் நாற்றம் ஆகி விட்டிருப்பதுபோல் சீட்டாட்டமும் அதன் பிறப்பின் பெருமை தேய்ந்து, விலை உயர்ந்த கால் செருப்பின் தன்மை போல் வீழ்ச்சியடைந்து போயிருக்கிறது.

பிரபுக்கள், அரசகுடும்பத்தினர், அறிவாளிகள் பலருக்கு பொழுது போக்குவதற்காகப் பிறந்த அற்புதக்கலை இது என்று பலர் கூறுகின்றார்கள்.

சேனைத் தலைவர்கள் தங்கள் படைகளை எப்படி நடத்தி, முன்னேற்றிச் சென்று வெற்றி பெறச் செய்வது என்பதைத் தீர்மானிக்கவும், திட்டமிடவும், திருப்தியாகப் பயன் படுத்தவும் இந்த ஆட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்றும் சிலர் இந்த ஆட்டத்தின் தோற்றத்திற்குக் காரணம் கூறுவார்கள்.

சீட்டாட்டம் தோன்றிய நோக்கம் நமக்குத் தெரிகிறதே ஒழிய, தோற்றுவித்தவர் யார் என்று தான் தெரியவில்லை. வரலாற்றாசிரியர்கள் ஆட்டத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றார்களே தவிர, தோன்றிய நிலையை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்ட இயலாத இக்கட்டான நிலையிலேயே இருந்து விட்டுப் போய்விட்டார்கள்.

தனிப்பட்ட ஒருவரைத் தான் யாராலும் ஆதி கர்த்தா என்று கூற இயலவில்லை என்றாலும்