பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டாரு மதிசயிக்கப் பணிமுடிப்பார்
வேந்தரெலாம் படியிற் போற்றத்
தண்டாம ரைத்தேவி தனிநடஞ்செய்
தக்ககுலம் தன்னில் வந்தும்
வண்டாருங் குழல்விற்று மரபிற்கே
வசைதேடும் மான மில்லாச்
சண்டாளர் சார்நாகென்? சத்திவடி
வேலவனே! சாற்று வாயே (௨௦)

 
 

தனவைசிய ஊழியன் பிரஸ், காரைக்குடி, 67-3500-21