பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மென்று எண்ணி, சில செய்யுட்கள் யாத்து “ஊழியன்” எ-வது இதழில் வெளியிட்டுள்ளேன். அதனுடன் இன்னும் சில செய்யுட்கள் சேர்த்து ஒரு புத்தகமாக வெளியிடவேண்டுமென்று “பர்மா நாட்டுக் கோட்டைச்செட்டியார் அசோசியேஷன்” காரியதரிசியாகிய சகோதரர் ஸ்ரீமான். பழனியப்பா அவர்கள் விரும்பியபடி முன் வெளியான ஆறு செய்யுட்களுடன் தற்போழ்து பதினான்கு செய்யுட்கள் சேர்த்து இருபதாக்கி யிருக்கிறேன். சமூகநன்மை கருதி இதனை அச்சிட்டு இனாமாக வழங்கும் மேற்படி சங்கத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இதனை உணர்ந்தாவது பெண்ணை விற்கும் சகோதரர்கள் திருந்தி சமூகத்திற்கு இழுக்கு இல்லாது செய்வார்கள் என்ற எண்ணத்துடன் இச்செய்யுட்கள் யாத்ததேயன்றி அவர்களைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கமல்ல. அங்ஙனமே, சகோதரர்கள் அதனை அறவே விடுத்து சமூகத்தைப் புனிதப்படுத்துமாறு இறைவன் திருவருள் புரிவராக.

இங்ஙனம்,

ராய. சொக்கலிங்கம்.

காரைக்குடி.