16
ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்: சொந்தம் கொண்டாடுகிறார்கள்; 'நாம் இணைந்திருக்கவேண்டாமா? அதற்கு இணைப்பு மொழிதேவையில்லையா?' என்று வலியவலிய கேட்கிறார்கள். தேசியத்திலிருந்து நழுவி, இன்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப் பெரிய காரணம் பெரியார் அவர்கள் கடத்திய அறப்போராட்டம் தான்.
மொழிப்பிரச்சனை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச்சாதாரணமான பிரச்சனை . அவர்கள் முக்கியமாகக் கருதுவது தமிழ்நாட்டு மக்களிடையே மனிதத்தன்மை வர வேண்டும்; அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற காட்டுமிறாண்டித்தனமான கொள்கைகள், நாட்டை கடக்கத்தக்க கொள்கைகள், மனிதனை மிருகமயமாக்கத்தக்க கொள்ளைகள், வெளிஉலகத்தாராலே இரண்டு மூன்று நூற்றாண்டுகளுகு முன்பே உதறித்
தள்ளப்பட்ட, உருப்படியற்ற கொள்கைகள் மறைய வேண்டும்; இவைகள் நீக்கப்பட்டுத் தமிழக மக்கள் துல்லியமான மனத்துடன், தூய்மையான எண்ணத்தில் —செயல் —திறனில் பகுத்தறிவாளர்களாக, பண்பாளர்கத் திகழவேண்டும்; அதற்கு ஒரு அறிவுப்புரட்சி தேவை என்பதிலே அவர்கள் நாட்டம் அமைந்திருக்கிறது; அந்த நாட்டத்தின் உருவம்தான் பெரியார் அவர்கள் என்றால் அதுமிகையாகாது.
இருநூற்றாண்டுப்பணியை
20 ஆண்டுகளில் செய்துகாட்டினார்
எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள், அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால் நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் என்ற அளவில் ஒரு