20
நடத்திக் காட்டி, அதில் பெற்ற வெற்றிகளை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர் சாதித்த காரியங்கள் மிகப்பெரியவை. என்றாலும் அவர் துணையோடு நாம் சாதிக்கவேண்டிய காரியங்கள் நிரம்ப இருக்கின்றன். ஒரு பெரிய மலை பிளக்கப்பட்டிருக்கின்றது. கற்பாறைகள் எல்லாம் கீழே உருண்டு வந்துகொண்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் பக்குவப்படுத்தி, அவைகளை எந்தெந்த வடிவத்திலே நாம் செதுக்க வேண்டுமோ, அதில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். பெரியார் அழைக்கிற அழைப்பைக் கேட்காத தமிழ்மக்கள் என்றுமே இருந்ததில்லை. அவர்கள் கூப்பிடும் குரலுக்கு ஓடிவரத் துடிக்காத இளைஞர்கள் இருந்ததில்லை. அப்படிப்பட்ட மாபெரும் தலைவருடைய 89வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமையடைகின்றேன். என்னுடைய நண்பர்கள் என்னை இவ்விழாவுக்குத் தலைமையேற்க வேண்டுமென்று கேட்ட நேரத்தில், திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்த விழாவில் தலைமை வகிக்கவேண்டுமென்று கேட்டார்கள்—அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் வரலாறு தெரியாத காரணத்தால்! "திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தவனும் நான் தான். அதைக்கொண்டு நாட்டிலே பெரிய புரட்சியை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் நிரம்பப் பெற்றவன் நான்! ஆகையினால் நான் இங்கே தலைமை வகிப்பது இயற்கைக்கு மாறானதல்ல.
பெரியார் இருநூறாண்டு வாழவேண்டும்
செட்டிநாட்டரசர் (எம்.ஏ. முத்தையா செட்டியார்) அவர்கள் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நம்மோடு இருந்திருக்கிறார்கள். தமிழ் காப்பாற்றப்படவேண்டும் என்ற காலத்திலேயும், நீதிக்கட்சி காலத்திலேயும், மற்ற எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் நம்மோடு இருந்து நமக்குத் துணைபுரிந்திருக்கிறார்கள். ஆங்கில மொழியின் அவசியத்தை, அவர்கள் இன்று நேற்றல்ல, 30 ஆண்டுகளாக, இங்கு மட்டுமல்ல, சட்ட மன்றங்களில் கூட வெகு தெளி-