பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 தந்தை பெரியார் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர்!

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டியவள்
அவர் அறிந்திராத அறிவாவார்
அணிந்திராத அணியாவார்!
கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு
எதிர்பார்க்கும் தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான் இராமசாமி!


அவர்தாம் பெரியார் - பார்!

தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்:
அவர்தாம் பெரியார்!