பக்கம்:பெரியார் மன்றோ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் அத்தியாயம்

சேலம் ஜில்லா கலேக்டர்

இக் காலத்தில் சேலம் ஜில்லா என வழங்கப்படுவது மன்ருே காலத்தில் பாராமஹால் என வழங்கி வந்தது. சேலம் ஜில்லாவின் தாலுக்காக்களாகிய கிருஷ்ணகிரி, தர்ம புரி, ஊத்தங்கசை, உசூர் ஆகியவையும், வட ஆர்க்காட்டு ஜில்லாவில் இப்பொழுதடங்கும் கிருப்பத்தாரும் ஒரு ஜில்லாவாக அப்பொழுது பாராமஹால் என அழைக்கப்பூட்டு வத்தன. கும்பெனியாருக்கும் கிப்புவுக்கும் கடந்த போர் களுக்குப் பின் சீரங்கப்பட்டண சமாதானம் உண்டாயிற்று. அச் சமாதான உடன்படிக்கைப்படி கும்பெனியாருக்குக் திப்பு பாாாமஹாலை யளிக்க நேர்ந்தது. இப் பாாாமஹாலை சிர்வகித்துவரும் பொருட்டுக் காப்டன் இசீட் என்ருெருவர் கியமிக்கப்பட்டார். அவர் நேர்மையும் வாய்மையும் வாய்ந்த வர்; மானத்தை யிழக்காது பொது நன்மைக்குப் பாடுபடக் கூடியவர்; எடுத்துக்கொண்ட எல் விஷயத்திலும் ஆர்வம் அதிகங் கொள்பவர்; மக்களுடைய, மொழிகளையும் பழக்க வழக்கங்களையும் அறித்தவர்; அரசிறை சம்பந்தமான ஆராய்ச்சிகளில் தேர்ந்தவர். அவர் மன்ருேவையும் இன்னு மிகுவரையும் தமக்கு உதவியாளராகத் தேர்க்தெடுத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/21&oldid=609853" இலிருந்து மீள்விக்கப்பட்டது