பக்கம்:பெரியார் மன்றோ.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்ன்ர் 81

கூடிய உதவியைச் செய்யவேண்டும். இதற்கு மேலொன்றுஞ் செய்ய முடியாவிட்டால், இன்சொல்லாவது கூறவேண்டும்.” இங்கினம் மதமாற்ற விஷயங்களில் அரசாங்க உக்கியோகஸ் தர்கள் தலையிடக்கூடாதென்று மன்ருே கூறினாேனும், அவருடைய கடவுளன்பு குறைவுடைத்து எனச் சொல்லிட லாகாது. அவர் நாள் கவருமல் சக்கிய வேத புத்தகத்தைப் படித்துவந்ததும் அப்புத்தகத்திலிருந்து அடிக்கடி மேம் கோள்கள் எடுத்துக் காட்டியிருப்பதுமே இதற்குச் சான்று.

இனி, மன்ருே கவர்னராயிருந்தபொழுது தமது கோத்தை எவ்வாறு கழித்தாரென்பதை யறிந்து கொள்ளப் பலர் ஆவலுள்ளவராயிருப்ப தியல்பே. ஆகலின், அது பற்றிச் சிறிது எழுதுவாம். அவர் காலையிலெழுந்தவுடன் இரண்டு மூன்று மணிநேரம் வெட்டவெளிகளிற் கழிப்பர். அவரது தலைநகராகிய சென்னையிலோ நாட்டுப்புறமாகிய கிண்டியிலோ அவர் இருந்துழி, வாசத்தில் நான்கு காட் காலையில் குதிரைமீதேறிச் செல்வர்; மூன்று காட் காலையில் கடந்துசெல்வர். கடந்து செல்லுங்கால் வந்துசேரும் மக்க ளோடு தாராளமாகப் பேசிக்கொண்டே போவார். எல்லா ருங் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பார். அவர்கள் கொடுக்கும் மனுக்களைத் தமது நீண்ட காத்தால் வாங்கிக் கொண்டு பார்த்துப் பதிலெழுதுவதாக வாக்களிப்பார். வாக் களித்தபடி கடப்பர். காலை கோக்தை இங்கனஞ் சிறிது கழித்தபின், வீடு திரும்பி உடையணிந்து ஏதேனும் எழுதி பும் படித்தும் சிலகால் கழித்து, எட்டுமணிக்குக் காலை யுண் டிக்கமர்வர். எவரேனும் கவர்னசோடு கணித்துப் பேச வேண்டியிருந்தால், அவர் காலை யுண்டிக்கு வருவதுண்டு; வத்தக்கால், வரவேற்கப்பட்டு விசாரிக்கப்படுவர். ஒன்பதரை

| 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/89&oldid=610004" இலிருந்து மீள்விக்கப்பட்டது