பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* { {} ஆ. பெரியோர் வாழ்விலே தெரிந்ததாக அவர் காட்டிக் கொள்ளவே இல்லை. மற்ற வழக்குகளை நடத்துவது போலவே, அந்த வழக்கையும் நடத்தினார். தம் நண்பர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார். உடனே தீர்ப்புக் கூறினார். தீர்ப்பின்படி அந்த நண்பர் வழக்குத் தொடுத்தவருக்கு ரூபாய் 200 கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் குறித்த காலத்தில் அவர் பணத்தைச் செலுத்தவில்லை. அதனால், அவரைக் கைது செய்ய முத்துசாமி அய்யர் உத்தரவிட்டார். அப்படியே அவர் கைது செய்யப்பட்டார். அப்போது முத்துசாமி என்ன செய்தார் தெரியுமா? நண்பருக்குப் பதிலாக தாமே அந்த இருநூறு ரூபாயையும் செலுத்தி, அவரைக் காப்பாற்றினார். முத்துசாமி அய்யர் நட்புக்கு மதிப்புக் கொடுப்பவர் என்பதையும், ஒரு சிறிதும் கடமை தவறாதவர் என்பதையுமே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. ★ 演 ★ உயர்நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் நீதிபதியா யிருந்து, பலரது பாராட்டுதல்களையும் பெற்றவர் முத்துசாமி அய்யர். மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த போதும் அவர் மிக மிக எளிய வாழ்க்கையே நடத்தி வந்தார். அவர் காலுக்குச் செருப்புப் போட்டுக் கொள்ள மாட்டார்; கழுத்துப்பட்டை அணிய மாட்டார். நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் போது, அவர் ஒரு