பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட ஒரு தோழி , 43 தெரியுமா? பதிமூன்று! மாப்பிள்ளைக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான் ! கல்யாணம் என்றால் ஏதோ ஒரு விளையாட்டு என்றே அவர்கள் அப்போது நினைத்தார்கள். புதுப் புது உடைகள் உடுத்தலாம்; விதம் விதமான பட்சனங்கள் சாப்பிடலாம்; கொட்டுமேளம், பாட்டுக் கச்சேரிகளெல்லாம் கேட்கலாம். இவைதான் கல்யாணம் என்று அவர்கள் நினைத்தார்கள். கல்யாணம் நடக்கும்போது, விளையாடுவதற்கு ஒரு தோழி கிடைத்தாள்' என்று அந்த மாப்பிள்ளைப் பையன் நினைத்தான். அது போலவே 'விளையாடு வதற்கு ஒரு தோழன் கிடைத்தான்’ என்றே அந்தப் பெண்ணும் நினைத்திருந்தாள். ஆனால், உலகம் போற்றப் போகும் ஒர் உத்தமர் கிடைத்தார்’ என்று அவள் நினைக்கவில்லை. அப்போது எப்படி நினைக்க முடியும்? ஆனால், பிற்காலத்தில் அந்த மாப்பிள்ளைப் பையன் உண்மையிலேயே உலகம் போற்றும் ஒர் உத்தமாரானான் ! அந்த மணப்பெண்ணும் உலகம் போற்றும் ஒர் உத்தமியாகி விட்டாள்! காந்திஜிதான் அந்த மாப்பிள்ளை. கஸ்தூரிபாய்தான் அந்த மணப்பெண் ! x * x திருமணம் நடந்தபோது கஸ்தூரிபாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. பெண் படித்து உத்தியோகமா பார்க்கப் போகிறாள்?’ என்றே அந்தக் காலத்துப் பெற்றோர்களில் பெரும்பாலோர் நினைத்தார்கள். ஆனால், திருமணம் நடந்த பிறகு, கஸ்தூரி பாய்க்கு எப்படியாவது எழுதப் படிக்கக் கற்றுக்