பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒ. பெரியோர் வாழ்விலே தின்பாராம். கரண்டி அப்பம் சாப்பிட்டுச் சிறிது நேரம் சென்ற பிறகு, பழைய சோறு சாப்பிடுவாராம். ★ 责 ★ சாமாவின் தந்தையார் ஊர் ஊராகச் சென்று கதைப் பிரசங்கம் செய்து வருவார். அவருடைய இராமாயணப் பிரசங்கம் மிகமிக நன்றாக இருக்கு மாம். அதனால், பல ஊர்களிலிருந்து அவருக்கு அடிக்கடி அழைப்பு வருமாம். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் மிகவும் அழகாக, கனிரென்று பாடுவாராம். பக்தி ததும்பும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு, எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்களாம். தம்முடையை பிள்ளையும் நன்றாகச் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் ஆசைப்பட் டார். அந்தக் காலத்தில் சங்கீத வித்துவான்களுக்குத் தெலுங்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், சங்கீதம் பயிலுவதற்குத் தெலுங்கு அவசியம் என்று தந்தையார் நினைத்தார். சாமாவை ஒரு பள்ளியில் சேர்த்தார். அந்தப் பள்ளியில் தெலுங்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. சாமாவுக்குத் தெலுங்கு ஏற வில்லை. ஆனாலும், சங்கீதம், தமிழ் இரண்டையும் நன்றாகக் கற்று வந்தார். பிள்ளைக்குத் தெலுங்கில் அக்கறை இல்லை என்பது தந்தைக்குத் தெரிந்தது. உடனே, அவருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. 'எந்த வேலைக்கும் நீ பயன்படமாட்டாய். சமையல் வேலைக்குக்கூடத்