பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒ. பெரியோர் வாழ்விலே மடியிலே முடிந்து வைத்திருந்த காசை அவசர அவசரமாக அவிழ்த்தார். கடைக்காரரிடம் கொடுத் தார். தொன்னை நிறைய எண்ணெய் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். சமையற்காரரிடம் கொடுத்துக் காய்ச்சச் சொன்னார். பிறகு, ஒன்றும் தெரியாதவர்போல், மற்றவர்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் காய்ச்சிய எண்ணையை வேலைக்காரன் கொண்டுவந்தான். பிள்ளையவர் களுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டான். குருவிடம் சாமிநாதய்யருக்கு எவ்வளவு பக்தி இருந்தது என்பதைக் காட்ட இதுபோல் இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைக் கூறலாம். ★ ★ 女 சாமிநாதய்யர் முதலில் கும்பகோணம் கல்லூரியில் பண்டிதராக வேலை பார்த்து வந்தார். அங்கு இருந்த போது மாணவர்கள் அவரிடம் மிகுந்த மரியாதை காட்டி வந்தார்கள். அவருடைய வகுப்பு என்றாலே அந்த மாணவர் களுக்கு ஒரே மகிழ்ச்சிதான்! ஆவலோடு பாடம் கேட்பார்கள். அங்கிருந்து 1903இல் சென்னை மாநிலக் கல்லூரிக்கு அவர் வந்தார். அப்போது, அங்கு படித்த மாணவர்களில் பலர் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை. அதிலும் தமிழாசிரியர் என்றால் மிகவும் இளப்பமாகவே கருதி வந்தார்கள்.