பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆ. பெரியோர் வாழ்விலே பாடலை அவரே அந்த விழாவில் பாடினார். அதைக் கேட்டு வந்திருந்தோரெல்லாம் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பாரதியார் பாடிய அந்தப் பாடலின் கடைசி நான்கு வரிகளை இப்போது அதே மாநிலக் கல்லூரித் தோட்டத்தில் கல்லிலே பொறித்து வைத்தி ருக்கிறார்கள். ஆம்; திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பக்கம் சென்றால், அங்குள்ள மாநிலக் கல்லூரியின் முன்னே நிற்கும் சாமிநாதய்யர் சிலைக்குக் கீழே பாருங்கள. பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய்; அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே. என்ற வரிகளைக் காண்பீர்கள்!