பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர் : 43 ஆஸாத் மாணவராக இருக்கும் போதே ஆசிரிய ராகவும் இருந்து வந்தார்! அவரிடம் பலர் பாடம் படித்து வந்தனர். அந்த மாணவர்களில் வயதான ஒரு கிழவரும் இருந்தார். அவர் தினமும் தவறாமல் ஆஸாத்திடம் வருவார். வந்து பாடம் கேட்டுச் செல் Eliffj. ஆஸாத் எந்தப் பாடம் நடத்தினாலும், அதை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறு வார். அவரிடம் படித்தவர்களெல்லாம் அவர் சொல் லிக் கொடுப்பதை மிகவும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிடுவார்கள். ஆனால், அந்தக் கிழ மாண வருடைய மூளையில் ஆஸாத் எது சொன்னாலும் சரியாக ஏறுவதில்லை. ஒருநாள் ஆஸாத் அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு விஷயத்தை அவர் பல முறை விளக்கிக் கூறியும், அந்தக் கிழவருக்கு அது விளங்கவில்லை. அது மட்டுமல்ல; எப்படிச் சொல்ல வேண்டுமோ, அதற்கு நேர் எதிராகவும் அவர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்! ஆஸாத் தினமும் அவருக்குப் பொறுமையுடன் தான் பாடம் சொல்லி வந்தார். ஆனாலும், அன்று அவருடைய பொறுமை பறந்துவிட்டது. கோபத்தில் தம்முடைய கையிலிருந்த புத்தகத்தைத் துக்கி அந்தக் கிழவர் முகத்திலே எறிந்து, உமக்குப் படிப்பு வராது. வீட்டுக்குப் போய்ப் புல்லைத் தின்னும் என்று கூறிவிட்டார். பாவம், அந்தக் கிழவர் பேசாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றார். அன்று முழுவதும் அவர் சாப்