இந்தப் புத்தகம் நம் தேசத்திற்கும் மொழிக்கும் பெருந்தொண் டாற்றிய பெரியோர் பலர். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கெல்லாம் நல்வழி காட்டி வருகின்றன. இத்தொகுப்பில் ஐந்து பெரியவர்களின் வாழ்க்கை யில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை மிகவும் சுவையாக எடுத்துக் கூறுகிறார் குழந்தைக் கவிஞர். இவற்றில் விளையாட ஒரு தோழி’ பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர்- இரண்டும் ஏற்கெனவே 'பூஞ்சோலை'யில் வெளிவந்தவை. மற்றவை புதிதாக எழுதப்பெற்றவை. குழந்தைக் கவிஞர் எழுதிய பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்-முதல் தொகுதி இதுவரை எட்டுப் பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டு அரசினர் பரிசையும், ஆசிரியர், பெற்றோர், சிறுவர் ஆகியோரின் நல் ஆதரவையும் அது பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த இரண்டாம் தொகுதி ஏழாவது பதிப்பு வெளிவருகின்றது. இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும்; சிறுவர் உலகம் இதனால் நற்பயன் அடையும் என நம்பு கிறோம். சென்னை & *,令 44.12.2000 குழந்தைப் புத்தக நிலையத்தார்
பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/5
Appearance