பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆ. பெரியோர் வாழ்விலே நன்றாகப் பறந்து கொண்டிருந்த காற்றாடி திடீரென்று நூலை அறுத்துக் கொண்டு, சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கி விட்டது. அது எங்கேனும் ஓர் இடத்தில் போய் விழும்; உடனே அதை எடுத்துக் கொள்ள லாம்’ என்ற எண்ணத்தில் அந்தச் சிறுவர்கள் அதைப் பார்த்துக்கொண்டே ஓடி வந்தார்கள். ஆனால், அது தரையிலே விழவில்லை. வழியிலிருந்த ஒரு கொன்றை மரத்தின் உச்சிக் கிளையிலே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டது! அந்தக் கொன்றை மரத்தில் ஏறி, காற்றாடியை எடுப்பதற்காகத்தான் அவர்கள் ஓடி வந்தார்கள். ஏழு வயதுச் சிறுவன், கொன்றை மரத்தில் அவர்கள் ஏறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தான். ஒருவன் சிறிது தூரமே ஏறினான். அதற்கு மேல் ஏற அவனால் முடியவில்லை. மற்றொருவன் பாதி மரம் ஏறிவிட்டான். அதற்கு மேல் செல்ல அவனுக்குப் பயம்! இன்னொருவன் தைரியமாக மேலே போனான். அவன் வயதிலே பெரியவன். அவன் ஒரு கிளையில் காலை வைத்ததும், சட சட’ என்ற சத்தம் கேட்டது. அவனைத் தாங்கும் சக்தி அந்தக் கிளைக்கு இல்லை. இன்னொரு கிளையில் காலை வைத்தான். அது வளைய ஆரம்பித்தது. சிறிது நேரம் முயன்று பார்த்துவிட்டு, 'உச்சிக் கிளைக்குப் போக நம்மால் முடியாதப்பா' என்று கூறிவிட்டான் அவன். வேறு வழியில்லாததால், எல்லோரும் ஏமாற்றத்துடன் கீழே இறங்கினார்கள்; வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். அவர்கள் போன பிறகு, வீட்டுக்காரச் சிறுவன் அந்தக் காற்றாடியை ஒரு முறை பார்த்தான். ஏ