பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றாடியால் காயம் பட்டவர் & 57 பட்டார். பல வைத்தியர்களிடம் பையனைக் காட்டி, மருந்துகள் வாங்கிக் கொடுத்து வந்தார். என்ன மருந்து கொடுத்தும் பயனில்லை. கடைசியாக ஒரு வைத்தியர் ஒருவகை எண்ணெயைத் தயார் செய்து கொடுத்தார். அந்த எண்ணெயைச் சாப்பிடுகிறவர்கள், வேறு எந்தவித எண்ணெய்ப் பலகாரத்தையும் சாப்பிடக்கூடாது. திரு.வி.க.விற்கு வீட்டில் பத்திய உணவே தயார் செய்து கொடுத்து வந்தார்கள். வீட்டில் மட்டும் பத்திய உணவு சாப்பிட்டால் போதுமா? வெளியிலும், கட்டுப்பாடாக இருக்க வேண்டாமா? ஒருநாள், பள்ளிக்கூடத்தின் முன்னால் கொண்டு வந்து விற்ற உளுந்துவடை ஒன்றை வாங்கித் தின்று ட்டார், திரு.வி.க. அதனால் உடம்பிலே கோளாறு ஏற்படத் தொடங்கியது கை கால்களைச் சரியாக நீட்ட மடக்க முடியவில்லை. முடக்குவாதம் போல் வந்துவிட்டது! வைத்தியர்கள் என்ன என்னவோ செய்து பார்த் தார்கள். குணம் ஏற்படவில்லை. சிறிது சிறிதாக நடக்கப் பழகவேண்டும். பிறகு ஒடி ஆடி விளை யாடினால் நாளடைவில் குணமாகிவிடும்' என்றார் கள். அவ்வாறே திரு.வி.க. தினமும் தட்டுத் தடுமாறி நடந்து பழகினார். நாளுக்கு நாள் நல்ல மாறுதல் ஏற்பட்டது. சில நாட்களில் அவர் ஒடி ஆடி விளையாடத் தொடங்கினார். விரைவில் உடல்நிலை சரிப்பட்டு விட்டது. நல்லகாலம்! ★ ★ ★