பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றாடியால் காயம் பட்டவர் . 59 கோபம் உண்டாகிவிட்டது. தன் கையிலிருந்த தேங்காயை திரு.வி.க.வின் கையைப் பார்த்து ஓங்கி அடித்தார். அவ்வளவுதான்; 'ஆ' என்று சுருண்டு அங்கே விழுந்தார் திரு.வி.க. எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு பார்த்தார்கள். திரு.வி.க.வின் கைவிரல்களில் ஒன்று நன்றாக அடிபட்டு நசுங்கிப் போய்விட்டது. இரத்தம் குபு குபு'வென்று வழிந்தது. சிறிது நேரத்தில் திரு.வி.க. எழுந்தார். அடிபட்ட கைவிரலைத் துணியால் சுற்றிக் கொண்டு நேராக ஒர் ஆங்கில வைத்தியசாலைக்குப் போனார். அங்கிருந்த டாக்டர் கை விரலை உற்றுப் பார்த்தார். 'தம்பி, இந்த விரலைச் சரிப்படுத்த முடியாது. உடனே எடுத்து விட வேண்டும்’ என்றார். திரு.வி.க.வுக்கு அந்த விரலை இழக்க மனமே இல்லை. என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார். அச்சமயம், பக்கத்திலிருந்த அறைக்குள் டாக்டர் ஏதோ வேலையாகச் சென்றார். இனி இங்கு இருந்தால் விரலுக்கு ஆபத்து என்று எண்ணி, டாக்டர் வெளியில் வருவதற்குள் திரு.வி.க. அந்த இடத்தை விட்டு நழுவி விட்டார்! நேராக, தமக்குத் தெரிந்த ஒரு தமிழ் வைத்திய ரிடம் சென்றார். நடந்ததை விவரமாகக் கூறினார். அந்த வைத்தியர், பச்சிலைகளை அரைத்து, விரலில் வைத்துக் கட்டினார். சில நாட்களில் காயம் ஆறியது. விரலும் பிழைத்தது. ★ ★ ★ திரு.வி.க. பத்தாவதுடன் படிப்பை முடித்துக் கொண்டார். பிறகு, வேலைக்கு மனுப்போட்டார்.