பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நோக்கிப் பாயும் தென்றல் மெல்ல கூடத்தில் துழைந்து விளையாடிக் கொண்டிருந்தது. எத்தனேயோ பெண்களின் உடலில் உராய்ந்து ஆடையைப் பற்றி இழுத்து இன்பத்தை ஊட்டிய மெல்லிய காற்றிற்கு இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா கூடத்தில் இருந்த சாய்வு நாற்காலியில் செல்வ வளத்தால் செழுப்புற்ற உடலைச் சாய்த்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள் அந்தச் சிமாட்டிகள். இடை இடையே அவர்கள் செவ்விதழ்கள் நீரை உரிஞ்சுவதுபோல மதுக் கிண்ணத்தை உரிஞ்சிக் கொண்டிருந்தன. ஊடு ஊடே புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை ஒட்டி இழுத்துப் புகையை உயர்த்தி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அச் சீமாட்டிகள். . . - செவ்விதழ்கள் உருவாக்கிய சிறு சந்தின் வழியாகச் சிகரெட்டுப் புகை விரைந்து வந்து கொண்டிருந்தது. நேராக வந்த புகை சிறிது பரந்து நெளிந்து சிறு சிறு மங்கிய கோடுகளை உண்டாக்கிச் சிலந்திக் கூட்டைப்போல வானிலே மிதந்து கொண்டிருந்தது. புகையைக் கலக்குத் அச்சீமாட்டியின் கை வீச்சோ சிறகை விரித்துப் பறக்கும் சிறு புள்ளை நினைவூட்டியது. சுட்டு விரலால் கலைக்கப் படும்போது மட்டும் அந்தப் புகைச் சுருள் துண்டிக்கப் பட்டு இரு கூறாய்ப் பிரிந்து மேலே எழுந்து வானிலே பல வளையங்களைச் சித்திரித்து விட்டு மெல்ல மறைந்தது. கூடம் எதிரொலிக்கும் சிரிப்பு, குளிர்மையான பார்வை, குறும்பான பேச்சு இவைகளுக்கிடையே மெல்ல மெல்ல மறையும் அந்தச் சிகரெட்டுப் புகை அவர்களுக்கு இன்பத்தை ஊட்ட மறக்கவில்லை. - ** . . மனதை விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். மதுக் கிண்ணம் குறையக் குறைய மனதிலிருந்த ஆசை