பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 99 இவற்றால் கல்லூரிகள், மடங்கள் என்பன சிறப்பாக வடமொழிக் கல்வியைப் பரப்பின தமிழகம் முழுவதும் இருந்த மடங்கள் தமிழ்க் கல்வியையும் சிறப்பாகச் சமயக் கல்வியையும் பரப்பின என்னலாம்." கோவில்களில் விளக்கப்பெற்ற நூல்கள் பாரதம், இராமாயணம், பிரபாகரம், சிவதருமம், இராசராச விஜயம் என்பன கோவில்களில் படித்து விளக்கப்பெற்றன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது" முதற் குலோத்துங்கன் காலத்தில் நீடூர்க் கோவிலில் புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை ஒன்று கட்டப்பட்டது என்பது தெரிகிறது." நரலோக வீரன் திருப்பணிகள் இவன் தொண்டை நாட்டு மணவிற்கோட்டத்து அரும்பாக்கம் என்ற சிற்றுாரினன் மணவிற்கோட்டத்தை ஆண்டவன் பொன்னம்பலக் கூத்தன், காலிங்கன், மானாவதாரன், பொற்கோயில் தொண்டைமான், நரலோக வீரன், அருளாகரன் என்ற பெயர்களை உடையவன். இவன் முதற் குலோத்துங்கன் ஆட்சியில் சிறந்த சேனைத் தலைவனாக இருந்தவன் விக்கிரம சோழன் ஆட்சி முற்பகுதியிலும் இருந்தவன். இவன் சிறந்த சிவபக்தன், இவன் சித்தலிங்கமடத்தில் சிவனுறையும் கற்றளி ஒன்று கட்டினான்' அதைச் சுற்றிப்பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தான்." திருப்புலிவன ஈசற்கு விளக்கெரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தான் : "திரிபுவனை ஈசற்கு நிலங்கள், மண்டபம், நந்தவனங்கள் இவற்றை அமைத்தான் " திருப்புகலூரில் நரலோக வீரன் என்ற தன் பெயரால் மண்டபம் ஒன்று கட்டினான்." இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் பல : (1) இவன் தெருக்களில் விளக்குகள் போடச் செய்தான் ; (2 விழாக்காலங்களில் தெருக்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்தான் ; (3) சிறந்த முறையில் ஒரு லட்சம் பாக்கு மரங்கள் கொண்ட நந்தவனம் ஒன்றை அமைத்தான் ; 4) தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் பெரிய அகன்றசாலையை அமைத்தான் ; கடற்கரையில் மாசி மகத்தின்போது நடராசப் பெருமான் தங்குவதற்காக மண்டபம் ஒன்று சமைத்தான் ; கோவிலில் தினந்தோறும் விளக்கு எரியச் செய்தான் ; கூத்தப்பிரான் கோவில் அருகில் தூயநன்னீர்க்குளம் ஒன்றைத் தொட்டான் ; கரையில் பெரிய ஆலமரம் ஒன்றை வளர்த்தான். 5 கோவிலைச்சுற்றிப் பெரிய மதிலை நரலோக வீரன்’ என்ற தன் பெயரால் எழுப்பினான் ; அதன் மேல் இரண்டு கோபுரங்கள் வானளாவத் தோன்றின. (6) இவன் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று அமைத்தான் , 7 கோவில் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்தான் ; 8கோவிலின் தென்வாயிலின் இரு புறங்களிலும் மங்கல விளக்குகள் எரியச் செய்தான் ; (9) தில்லைவாழ் அந்தணர்க்கு வள்ளலாய் விளங்கினான் ; (10) திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஒதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தான்: (1)