திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 97
பரமேசுவரருடைய அடியேங்கள்' என்றது சேக்கிழார் தம்மையும் பிற திருத்தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. ஆள்: ஒருமை பன்மை மயக்கம். அடியார்கள்-அடி யவர்களே.எனும்-என்று எண்ணும்; இடைக்குறை, அறிவும். அறிவையும். இப்படியால்-இந்த வகையால். இது-இவற்றை: ஒருமை பன்மை மயக்கம். அன்றி-அல்லாமல். த்: சந் தி. தமதம்முடைய; என்றது . அந்தப் பரமேசுவரருடைய’ என் பதை. இசைவு-சம்மதத்தை. கொண்டு-பெற்றுக் கொண்டு. இயலும்-நடைபெறும். துப்புரவு-பரிசுத்தம். இல்லார்-இல் வாதவர்களாகிய சமணர்களினுடைய ஒருமை பன்மை: மயக்கம். துணிவும்-துணிந்த கொள்கைகளும்; ஆகுபெயர். துகளாக-பொடிப் பொடியாக அழிந்து போகுமாறு. ச்:சந்தி. சூழ்ந்து-ஓர் உபாயத்தை எண்ணி. எழுந்தார்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் தங்கிக் கொண்டிருந்த திருமடத்திலிருந்து எழுந்து சென்றார்.
அடுத்து வரும் 72-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
"சீர்த்தியைப் பெற்ற வேதியராகிய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் பிரம தீர்த் தத்தில் நிரம்பியிருக்கும் நீரை அடைந்து தாம் வழக்கமாகப் புரிந்து வரும் சந்தியாவந் தனம், பிரம்மயக்ஞம் முதலிய நியமங்களை நிறைவேற்றிய பிறகு அந்தப் பிரம தீர்த்தத்தினுடைய கரையின் மேல் ஏறி வந்து பெரிய மெய்ஞ்ஞானத்தோடு விளங்குகின்ற தம் முடைய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பார்த்து. 'நீ உனக்கு யார் கொடுத்த பாலாகிய உணவைக் குடித்தது?' எனக் கேட்டுச் சினத் தைப் பெற்று." பாடல் வருமாறு:
சீர்மறையோர் சிவபாத இருதயரும் சிறுபொழுதில் நீர்மருவித் தாம்செய்யும் கியமங்கள் முடித்தேறிப் பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி, யாரளித்த பாலடிசில் உண்டது'ே எனவெகுளா.."
டெ-10-7