திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 丑2$“
ஆகாயத்தில். ஆர் த் து-மகிழ்ச்சியால் ஆரவாரத்தைப் புரிந்து. ப்: சந்தி. பிரசமலர்-கற்பக மரத்திலிருந்து கொய்து கொண்டு வந்த தேன் நிரம்பிய மலர்களை; ஒருமை பன்மை, மயக்கம். மழை-மழையைப் போல. பொழிந்தார்.சொரிந் தார்கள் : ஒருமை பன்மை மயக்கம்.
பிறகு உள்ள 81-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அப்போது சீகாழிக்கு வந்து பொங்கி எழும் மங்கல வாத்தியங்களான ஆகாய துந்துபிகளினுடைய முழக்கமும் கந்தருவர்களும் கின்னரர்களும் பாடும் இனிய கானத்தினால் உண்டாகும் ஒசை சமுத்திரத்தைப் போல முழங்கும் முழக்கமும், இந்திரன் முதலாக உள்ள தேவர்கள் எடுத்துத் துதிக்கும் இசைப் பாடல்களினுடைய முழக்கமும், முடிவு இல்லாத பல சிவகணத்தலைவர்கள் செய்யும் அர, அர' என்று ஒதும் ஒசையினால் அடங்கி நிற்க. பாடல் வருமாறு:
' வந்தெழு மங்கலமான வானகதுக் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கானஒலிக் கடல்முழக்கும் இந்திரனே முதல்தேவர் எடுத்தேத்தும் இசைமுழக்கும். அந்தமில்பல் கணநாதர் அர எனும்ஓசையின் அடங்க."
இந்தப் பாடல் குளகம். வந்து-அப்போது சீகாழிக்கு வந்து எழு-பொங்கி எழும். மங்கலமான-மங்கல வாத்தியங் களான ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். வானக. ஆகாய, துந்து.பி-துந்துபிகள்: ஒருமை பன்மை மயக்கம். முழக்கும் முழங்கும் முழக்கமும். கந்தருவர்-கந்தருவர்களும்: ஒருமை பன்மை மயக்கம். கின்னரர்கள்-கின்னரர்களும், கான பாடும் இனிய காணத்தினால் உண்டாகும். ஒலி-ஒசை, க் - சந்தி. கடல்-சமுத்திரத்தைப் போல; உவம ஆகுபெயர். முழக்கும்-முழங்கும் முழக்கமும். இந்திரன்-தேவர்களி: னுடைய அரசனாகிய இந்திரன். ஏ:அசைநிலை. முதல்முதலாக உள்ள. தேவர்.தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். எடுத்து ஏத்தும்-எடுத்துப் பிரமபுரீசரைத் துதிக்கும். இசை-இசைப் பாடல்களினுடைய ஒருமை.