உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..i.42 பெரிய புராண விளக்கம்-10

விட்டு ஆரவாரம் புரியும் பான்மையினால், மலர்களைப் பரப்பிய அந்தத் தீருவீதி சிவானந்தம் என்னும் நீர் நிரம்பிய வெள்ளத்தைச் கொண்ட நதி ஒட அந்த நதியின் மேல் 'பொங்கி எழும் அழகு மருவிய நுரைகளைக் கொண்ட கொப்புளங்கள் மேல் எழுந்து இறங்குபவற்றைப் போலத் திகழும் பெருமையைப் பெற்று விளங்கும் தோற்றத்தைப் பெற்றதாக. பாடல் வருமாறு:

மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்

தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து தாம்அறுவை உத்தரியம் தனிவிசும்பில் எறிந்தார்க்கும் தன்மை யாலே பூமறுகு சிவானந்தப் பெருக்காறு

போத அதன்மீது பொங்கும் காமர் நுரைக் குமிழினழுக் திழிவனபோல்

விளங்குபெரும் காட்சித் தாக." இந்தப் பாடலும் குளகம். மா-இவ்வாறு சிவபாத 'இருதயர் தம்முடைய புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்முடைய பிடரியின்மேல் ஏற்றிக் கொண்டு சென்ற அந்தச் சமயத்தில் பெருமையைப் பெற்று விளங்கும். மறையோர்-வேதியர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குழாத்தினுடன்-கூட்டத்தோடு. மல்குமிகுதியாகக் கூடிய திருத்தொண்டர்-பிரமபுரீசருடைய திருத்தொண்டர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குழாம்-கூட்டம். மருங்கு-தம்முடைய பக்கத்தில். சூழ்ந்து. சுற்றிக் கொண்டு. தாம்’ என்றது அந்தத் தொண்டர்களை. அறுவை.தாங்கள் த ங் க ளு ை- ய இ டு ப் பு க் க ளி ல் உடுத்துக் கொண்டிருந்த ஆடைகளோடு: ஒருமை பன்மை மயக்கம். உத்தரியம்-அங்கவஸ்திரங்களை. தனி-ஒப்பற்ற. விசும்பில்-ஆகாயத்தில். எறிந்து-வீசிவிட்டு, ஆர்க்கும்ஆரவாரம் புரியும். தன்மையால்-பான்மையினால், ஏ;அசை நிலை. பூ-மலர்களைப் பரப்பி யிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மறுகு-அந்தத் திருவீதி. சி வா ன ந் த