உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 159

சியை வழங்கியருளி. வைகினார்.சீகாழியில் தங்கிக் கொண்

டிருந்தார்.

பின்பு வரும் 109-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு சீகாழியில் தங்கிக் கொண்டிருந்த அந்த நிலை யில் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை முன்பு பெற்று வழங்கிய அன்னையா ராகிய பகவதியார் முன்னால் பிறப்பதற்காகத் தம்முடைய பெற்றோர்கள் முயன்று புரிந்த தவத்தைச் செய்த அழகிய நன்னிபள்ளி முதலாக உள்ள சிவத்தலங்களில் வாழும் வேதி கர்கள் எல்லாரும் நிலை பெற்ற பெருமையைப் பெற்று விளங்கும் மகிழ்ச்சியோடு மங்கல வாத்தியங்கள் முழங்க இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை ஓதிக் கொண்டு பகைவர்கள் ஏறாத கன்னித் தன்மையைப் பெற்ற திருமதில் சுற்றியிருக்கும் சண்பை நகரமாகிய சீகாழி 1ங்ாநகரத்திற்கு வந்து சேர்ந்து, கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த அந்தணர்களுக்கு அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்கினார்கள். பாடல் வருமாறு:

" அக்கிலையில் ஆளுடைய பிள்ளையார் - தமைமுன்னம் அளித்த தாயார்

முன்னுதிக்க முயன்றதவத் திருகன்னி பள்ளிமுதல் மறையோர் எல்லாம் மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலது

ரியம்துவைப்ப மறைகள் ஓதிக் கன்னிமதிற் சண்பைங்கர் வந்தணைந்து

கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.' அந்நிலையில்-அவ்வாறு சீகாழியில் தாம் தங்கிக் கொண்

டிருந்த அந்த நிலையில். ஆளுடைய பிள்ளையார் தமைஆளுடைய பிள்ளையார்ாகிய திருஞான சம்பந்த மூர்த்தி