உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 183

இடுபறை ஒன்ற அத்தர் பியல்மேல்

இருந்தி னிசையால் உரைத்த பனுவல்

நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி

உள்க வினை கெடுதல் ஆணைநமதே.'

அடுத்து வரும் 116-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'முதல்வராகிய நற்றுணையப்பர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுரத் திற்கு முன்னால் உள்ள வாசலை அடைந்து திருக்கோயிலுக் குள் நுழைந்து தம்முடைய திருவுள்ளத்தில் பக்தி மிகுதியாக உண்டாக நியாய முறைப்படி அந்த நற்றுனையப்பரை வணங்கி வாழ்த்திப் பிறகு நெடுங்காலமாக இருக்கத் தக்க தாகிய அந்த நற்றுணையப்பர் வழங்கிய திருவருளை முன் னால் தாம்பெற்றுக் கொண்டு எழுந்தருளுபவரைச் சுற்றிக் கொண்டு பூசுரர்களாகிய அந்தணர்களுடைய கூட்டங்கள் தம்மை வாழ்த்தும் விருப்பத்தை நோக்கி கவுண்டின்ய கோத் திரத்தில் பிறந்த அந்தணர்களுக்குத் தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருநனிபள்ளியில் தங்கிக் கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

ஆதியார் கோயில் வாயில்

அணைந்துபுக் கன்பு கூர நீதியால் பணிந்து போற்றி

டிேய அருள்முன் பெற்றுப் போதுவார் தம்மைச் சூழ்ந்து

பூசுரர் குழாங்கள். போற்றும் காதல்கண் டங்க மர்ந்தார்

கவுணியர் தலைவ னார்தாம்.' ஆதியார்-முதல்வராகிய நற்றுனையப்பர். கோயில். எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு. வாயில்-முன்னால் உயரமாக நிற்கும் கோபுரத்திற்கு முன்பு உள்ள வாசலை. அணைந்து-அடைந்து. புச்கு-திருக்கோயிலுக்கு உள்ளே துழைந்து. அன்பு-பக்தி. கூர-மிகுதியாக உண்டாக, நீதியால்