உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 183.

யர்கள் வாழ்த்துக்களைக் கூற எழுந்தருளி திருவலம்புரம் என்னும் சிவத்தலத்தில் நிலைபெற்றுத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவராகிய வலம்புரி நாதேசுவரரை வணங்கி விட்டுத் தாம் பாடியருளும், "கொடியுடை' என்னும் தொடக்கத்தைப் பெற்ற திருப்பதி கத்தால் அந்த வலம்புரி நாதேசுவரரைத் துதித்துவிட்டு மேலே எழுந்தருளி நிரம்பிய நீர் வளத்தைப் பெற்ற அழகிய சாய்க்காட்டுக்குத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிச் சாயாவனேசுவரரை வணங்குவதற்கு எண்ணி , அந்தச் சாய்க்காட்டுக்கு எழுந்தருளுபவரானார். பாடல் வருமாறு:

கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி மறையவர் போற்ற வந்து

திருவலம் புரத்து மன்னும் இறைவரைத் தொழுது பாடும்

கொடியுடை ஏத்திப் போந்து கிறைபுனல் திருச்சாய்க் காடு

தொழுதற்கு கினைந்து செல்வார். '

கறை-ஆலகால விடத்தை விழுங்கியமையால் அமைந்த. கறையை அணி-புனைந்து கொண்டிருக்கும், கண்டர்-திருக் கழுத்தைப் பெற்றவராகிய நற்றுணையப்பர். கோயில். எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில். காதலால்-விருப்பத் தோடு உருபு மயக்கம். பணிந்து-அந்த நற்றுணையப்பரை வணங்கி. பாடி-ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி, மறை யவர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்றவாழ்த்துக்களைக் கூற. வந்து-எழுந்தருளி. திருவலம்புரத்து. திருவலம்புரம் என்னும் சிவத்தலத்தில். மன்னும்-நிலை பெற்றுத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். இறைவரை-எங்கும் நிறைந்திருப்பவராகிய வலம்புரி நாதே சுவரரை. த்:சந்தி. தொழுது-வணங்கி விட்டு. பாடும்-தாம் பாடியருளும். 'கொடியுடை ஏத்தி-கொடியுடை' என்னும்