.#06 பெரிய புராண விளக்கம்-10
இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: படம் கொள் நாகம் சென்னி சேர்த்திப்
பாய்பு வித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார் ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறும் தலைகை ஏந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னிரே...'
பிறகு வரும் 127-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரி வதற்கு அருமையாக உள்ள இயல்போடு சுவேதவனேசுவர ருடைய திருக்கோயிலுக்கு வெளியில் எழுந்தருளி அந்தச் சுவேதவனேசுவரரைப் பணிந்து விட்டு அந்தத் திருவெண் காட்டில் தாம் தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் தென் திருமுல்லைவாயிலை அடைந்து முல்லைவன நாதருக்குச் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதி கத்தை அணிந்து விட்டுச் செந்தமிழ் நாட்டில் விளங்கிய வேறு சிவத்தலங்களுக்கும் எழுந்தருளி அந்தச் சிவத்தலங் களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெரு மான்களைப் பணிபவராகி வேதியர்கள் தம்மைத் துதிக்க பல வகை மரங்கள் மிகுதியாக வளர்ந்து நிற்கும் புகவி யாகிய சீகாழிக்குத் திருவெண்காட்டிலிருந்து எழுந்தருளி வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு: -
' அருமையாற் புறம்பு போக்து.
வணங்கிஅங் கமரும் நாளில் திருமுல்லை வாயில் எய்திச்
செந்தமிழ் மாலை சாத்தி